வெளிநாட்டுப் பயணிகள் பலரும் இந்தியாவிற்குச் செல்வது ஆபத்து என்று பேசி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டங்கன் மெக்நாட் (Duncan McNaught) என்ற பயணி இந்தியாவைப் பற்றி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
“இந்தியா ரொம்ப டேஞ்சர் (Danger)” என்று தனது வீடியோவைத் தொடங்கும் அவர், அடுத்தடுத்த காட்சிகளில் “இந்தியா ஆபத்தான அளவிற்கு அன்பானது, ஆபத்தான அளவிற்கு அழகான கலாச்சாரம் கொண்டது, ஆபத்தான அளவிற்கு மகிழ்ச்சியானது மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளைக் கொண்டது” என்று கூறி ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையை மாற்றியுள்ளார்.
View this post on Instagram
தனது பயணத்தின் போது தெருவோர மக்களுடன் நடனமாடியும், பொற்கோயிலின் அமைதியை ரசித்தும் அவர் வெளியிட்ட காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“முன்முடிவுகளுடன் வராமல் இந்தியாவின் உண்மையான அழகைப் படம் பிடித்துள்ளீர்கள்” என இந்தியர்கள் அவருக்குப் பாராட்டு மழையைக் குவித்து வருகின்றனர். எந்தவொரு விளம்பரத்திற்காகவும் இல்லாமல், மனதார இந்தியாவின் விருந்தோம்பலைப் பாராட்டியுள்ள டங்கனின் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
