சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், பொது இடங்களில் நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வது மற்றும் குழந்தைகளின் வளர்ப்பு முறை குறித்தப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தாய் தனது சிறுவனைத் தேங்காய்த் தொட்டியில் சிறுநீர் கழிக்க வைத்து, பின்னர் அதைச் சாலையிலேயே கொட்டியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்தக் காட்சியை அந்தச் சிறுவனின் தந்தையே வீடியோவாகப் பதிவு செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது. தூய்மை மற்றும் பொது ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் இவ்வேளையில், இத்தகைய செயல்கள் சமூகப் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகின்றன.

“>

மேலும் பெற்றோர்களே குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக விளங்கும் நிலையில், அவர்களுக்குச் சரியான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. பொது இடங்களை அசுத்தம் செய்வது சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு, வளர்ந்து வரும் தலைமுறைக்குத் தவறான முன்னுதாரணமாகவும் அமையும்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நாகரிகமான சமூகத்தில் இத்தகைய செயல்களுக்கு இடமில்லை என்ற கருத்தை மக்கள் வலுவாக முன்வைத்து வருகின்றனர். இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.