புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறியைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளில் ஊசுடு (தனி), நெட்டப்பாக்கம் (தனி) மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விசிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிக-விற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் இடங்களைக் கோரி வந்த விசிக, தற்போது தங்களின் பலத்தைக் காட்ட இந்த 3 தொகுதிகளில் தனித்துக் களம் இறங்குகிறது.

இருப்பினும், இந்த 3 தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக விசிக பாடுபடும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமை சிதையாது என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.