தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக எனப் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், சசிகலாவின் புதிய கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார்.

தைலாபுரத்தில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு இந்த 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘தமிழ் மீனவர் கூட்டமைப்பு’ நிறுவனர் ரஜினிமகி, ராமதாஸை நேரில் சந்தித்துத் தனது ஆதரவை வழங்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாமகவிற்குத் தங்களது வாக்கு வங்கியை அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாகத் தென் மாவட்டங்கள் மற்றும் சேலம் எடப்பாடி தொகுதியில் தங்களுக்குக் கணிசமான வாக்குகள் இருப்பதாகவும், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்தத் தமிழகம் முழுவதும் பாடுபடப் போவதாகவும் மீனவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.