ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தயங்களுக்கு எதிராக மத்திய அரசு தற்போது தனது இரும்புக்கரத்தை நீட்டியுள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 300 இணையதளங்கள் மற்றும் செயலிகளை மத்திய அரசு அதிரடியாக முடக்கி உத்தரவிட்டுள்ளது.
புதிய ஆன்லைன் கேமிங் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை மொத்தம் 8,400 செயலிகள் மற்றும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் இத்தகைய தளங்களைக் கண்டறிந்து முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாகச் சட்டவிரோத சூதாட்ட நிறுவனங்கள் தற்போது ஆட்டம் கண்டுள்ளன.
