சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 15,218 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,21,744 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.