அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விலை உயர்ந்த கார்கள் வாங்கித் தரப்படும் என்ற அறிவிப்பு அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தவித்து வருவதாகவும், அரசுப் பெட்டூகம் காலியாக இருப்பதாகவும் கூறி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், இந்த அதிரடி முடிவு கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் பல இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில், 234 எம்.எல்.ஏ-க்களுக்கு ஆடம்பர கார்களை வாங்குவதற்கு எங்குிருந்து நிதி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தை இதற்குப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கண்டனங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன.

சொந்தமாகக் கார் இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த உதவியை வழங்கியிருக்கலாம் அல்லது கட்சிக் நிதி மூலம் இதைக் கவனித்திருக்கலாம் என்ற கருத்துகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. பெண்களுக்கான உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் திணறும் அரசு, எம்.எல்.ஏ-க்களின் வசதிக்காகப் பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த அதிருப்தி அலைகள் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இதனால், “நாம் தவறு செய்துவிட்டோமோ?” என்ற கவலையிலும் ஆழ்ந்த யோசனையிலும் அவர் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

 

மேலும், அரசின் வருவாயை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் மட்டக் குழுவுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன் தலைவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.