இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தப் படம், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி “குட் ஃப்ரைடே” விடுமுறை தினத்தை முன்னிட்டு படம் ரிலீஸாக இருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
