தாய்லாந்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது கணவரைத் திருத்த முடியாத விரக்தியில், ஒரு மனைவி வினோதமான முடிவெடுத்துள்ளார்.
பலமுறை எச்சரித்தும் கணவர் தனது கள்ள உறவைக் கைவிடாததால், குன் என்ற அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்வதற்குப் பதிலாக, அவரைத் தொடர்பில் உள்ள பெண்ணிடமே மாதத்திற்கு 85,000 ரூபாய் பணத்திற்கு “வாடகைக்கு” விட முன்வந்துள்ளார்.
மனைவியின் இந்த அதிரடி யோசனையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், இதற்குச் சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
