ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரமலான் மாதத்தின் புனிதமான இரவில் (28-வது இரவு) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 400 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“>

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது எக்ஸ் (X) தளத்தில், “குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை இலக்கு வைப்பது ஒரு போர்க்குற்றமாகும்; மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் வேதனையளிக்கிறது” என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

“>

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த கொடூரச் செயலை உடனே விசாரித்து, காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் நிலையில், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.