ரயில் பயணம் என்றாலே கூட்ட நெரிசலும், இருக்கைக்காக நடக்கும் வாக்குவாதங்களும் சகஜமாகிவிட்டது. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, பயணிகளையே உறைய வைத்துள்ளது.

ஓடும் ரயிலில் இருக்கைக்காக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒரு கட்டத்தில் பயங்கரமான கைகலப்பாக மாறியது. வீடியோவில் ஒரு முதியவர் ஒரு முழு இருக்கையையும் ஆக்கிரமித்து படுத்துக்கொண்டிருக்கிறார்.

அந்தப் பெட்டியில் கூட்டம் அலைமோதிய நிலையிலும், மற்றவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்த அந்த மூதாட்டியை எழுந்திருக்குமாறு அங்கிருந்த ஒரு பெண் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி, திடீரென எழுந்து அந்தப் பெண்ணை காலால் எட்டி உதைத்தும், சரமாரியாகத் தாக்கியும் அதிரடி காட்டியுள்ளார்.

சுற்றிலும் இருந்த பயணிகள் எவ்வளவோ தடுத்தும் அந்த மூதாட்டி அடங்குவதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த இடமே குஸ்தி நடக்கும் மைதானம் போல மாறியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

“பொது போக்குவரத்தில் மற்றவர்களையும் மதிக்க வேண்டும்” என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்க, “அந்தப் பெண்ணின் அத்துமீறலால் தான் பாட்டி கோபமடைந்துள்ளார்” என மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ, இந்த ரயில் சண்டை வீடியோ இப்போது இணையத்தில் பெரும் ‘ராடா’ செய்து வருகிறது.