அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸ்மேரி தோர்ன்டன் என்ற பெண், தான் 10 நிமிடங்கள் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியதால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கருதினர். அந்த 10 நிமிட மரணத்தின் போது, தனது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்றதாகவும், அங்கு தேவதைகளையும் எல்லையற்ற அமைதியையும் கண்டதாகவும் அவர் விவரிக்கிறார்.

சொர்க்கத்தின் கதவைத் திறக்க முயன்றபோது, தன்னை எமர்ஜென்சி பிரிவில் சிகிச்சை அளித்த செவிலியர் அழுது கொண்டிருப்பதை ரோஸ்மேரி கண்டார். “உன்னை இறக்க விடமாட்டேன்” என்று உறுதியளித்த அந்த செவிலியரின் துக்கத்தைப் பார்த்த ரோஸ்மேரி, மற்றவர்களுக்கு வலியைத் தரக்கூடாது என்பதற்காக மீண்டும் உயிர்வாழத் தீர்மானித்தார்.

அடுத்த கணமே அவருக்கு சுயநினைவு திரும்பியது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் மீண்டும் உயிர் பெற்ற பிறகு நடத்தப்பட்ட சோதனையில், அவரது உடலில் இருந்த புற்றுநோய் செல்கள் முற்றிலும் மறைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர் தனது சொத்துக்களை விற்றுவிட்டு அமைதியான கிராமப்புற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.