சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் மின்னல் வேகச் செயல்பாடு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அந்த வீடியோவில், அவருக்கு அவசர அழைப்பு வந்த அடுத்த நொடியே, எதைப் பற்றியும் யோசிக்காமல் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார்.

கடமை உணர்வோடு அவர் காட்டிய அந்த வேகம் மற்றும் அர்ப்பணிப்பு, “நிஜமான ஹீரோக்கள் இவர்கள்தான்” எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

“>

 

ஒரு விநாடி தாமதம் கூட ஒரு உயிரின் இழப்பிற்கு காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து அவர் செயல்பட்ட விதம் இணையத்தில் பலரின் இதயங்களை வென்றுள்ளது.