சிறுவயது என்பது மிகவும் அழகானது, ஆனால் அது சீக்கிரம் கடந்துவிடுவதுதான் வருத்தமே. தற்போது இணையத்தில் ஒரு சிறிய சிறுவன் மளிகைக் கடையில் சாக்லேட் மற்றும் பிஸ்கட் வாங்கச் சென்று கடைக்காரப் பெண்ணுடன் வெகுளித்தனமாக பேரம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கையில் இருக்கும் ஒன்றிரண்டு ரூபாயை வைத்துக்கொண்டு, குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்க அந்தச் சிறுவன் முயற்சிப்பதும், ஒவ்வொரு பொருளின் தரத்தையும் தன் அறிவுக்கு எட்டியவரை ஆராய்ந்து பார்ப்பதும் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறது.
இந்த மழலைத்தனமான பேரம் பேசும் ஸ்டைல் பலரையும் தங்களின் சிறுவயது நினைவுகளுக்குக் கூட்டிச் சென்றுள்ளது. சுமார் 3 நிமிடம் நீடிக்கும் இந்த வீடியோவில், அந்தச் சிறுவன் விடாமல் பேரம் பேசினாலும் கடைக்காரப் பெண்மணி மிகவும் பொறுமையாக அவனிடம் பேசி விலையை விளக்குகிறார்.
இந்த வீடியோவை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இஷிகா படிதார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “அன்பான வாடிக்கையாளர்” என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
“>
“இவன் பேரம் பேசுவதில் பிதாமகன்” என்றும், “சிறந்த டீல் பெற எல்லா வித்தைகளையும் இறக்குகிறான்” என்றும் நெட்டிசன்கள் அந்தச் சிறுவனின் க்யூட் செயலைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
