சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,18,080 ரூபாய் க்கும், ஒரு கிராம் 14,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 16,102 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,28,816 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.