திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் படிப்பு தொடர்பான பணிக்காகச் சென்னை வந்தபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அபிராம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவியின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் போலீசார் நடத்திய விரிவான விசாரணையில் அந்த மாணவி அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அத்தகைய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே அந்த மாணவி இவ்வாறு பொய்யான புகாரை அளித்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
