சீனாவில் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பு மொத்தமும், ஒரே ஒரு தவறான முடிவால் சுக்குநூறாகியுள்ளது. “வெள்ளி விலை கிடுகிடுவென ஏறும், நாம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்” என்ற ஆசையில், பெண் ஒருவர் தனது கணவனுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த அத்தனை பணத்தையும் அள்ளிச் சென்று வெள்ளிப் பாளங்களில் (Silver Bars) முதலீடு செய்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் வெள்ளி விலை அதலபாதாளத்திற்குச் செல்ல, அந்தப் பெண்ணின் மொத்த முதலீடும் காணாமல் போனது.

​தன் வாழ்நாள் உழைப்பு ஒரு நொடியில் காணாமல் போனதை அறிந்த கணவன், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார். “கஷ்டப்பட்டு சிறுகச் சிறுகச் சேர்த்த காசை இப்படி ஒண்ணுமே இல்லாம பண்ணிட்டியே… இனி நம்ம சோத்துக்கு எங்கே போவோம்?” எனக் கத்தியபடி, தனது மனைவியை நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். பணத்தாசையினால் ஒரு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்த இந்தச் சம்பவம், தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி முதலீட்டாளர்களுக்குப் பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.