பணம், காசு என வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்திற்குச் சென்றாலும், நம்மைப் பெற்று வளர்த்த தாயின் உணர்வுகளுக்கு முன்னால் எல்லாமே சுழியம்தான் என்பதை உணர்த்துகிறது இந்த வைரல் வீடியோ.ṣ

பணம், காசு என வாழ்க்கையில் எவ்வளவோ உயரத்திற்குச் சென்றாலும், நம்மைப் பெற்று வளர்த்த தாயின் உணர்வுகளுக்கு முன்னால் எல்லாமே சுழியம்தான் என்பதை உணர்த்துகிறது இந்த வைரல் வீடியோ.

அடுக்குமாடி குடியிருப்புகளில் (Apartments) வசிக்கும் பலரும் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குப் பழகிவிட்ட நிலையில், அங்குள்ள முதியவர்கள், குறிப்பாகத் தாய்மார்கள் படும் தனிமைத் துயரத்தையும், அவர்களின் மனப் போராட்டத்தையும் இந்த வீடியோ தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது.

வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிள்ளைகள், தாயின் மனதிற்குத் தேவையான அன்பையும் நேரத்தையும் ஒதுக்கத் தவறுவது எவ்வளவு பெரிய வலி என்பதைப் பார்க்கும் எவர் கண்ணிலும் கண்ணீர் வரவழைக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

“நீங்கள் ஒரு பெரிய கட்டிடத்தில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த வீடியோவை கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள்” எனச் சமூக வலைதளங்களில் பலரும் இதை உருக்கத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.