சமூக வலைதளங்களில் திறமைக்குக் பஞ்சமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது ஏழைப் பெண் ஒருவர் ‘அப்கான் ஜலேபி’ என்ற ஹிந்திப் பாடலுக்கு ஆடும் அதிரடி நடன வீடியோ இணையத்தை அதிர வைத்து வருகிறது.

அந்தப் பெண்ணின் முகபாவனைகள் மற்றும் அபாரமான நடன அசைவுகளைப் பார்த்த பலரும், “வறுமையிலும் இவ்வளவு பெரிய திறமையா?” என வியந்து பாராட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையில் இது அந்தப் பெண் ஆடிய நடனம் அல்ல, மாறாக ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ ஆகும்.

வீடியோவில் நடனமாடும் பெண்ணைச் சுற்றியுள்ள மக்கள் சிலையாக அசையாமல் நிற்பதை வைத்தே இது ஏஐ வீடியோ என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்தப் பெண்ணிடம் இருந்து வெளிப்படுத்தப்பட்ட அட்டகாசமான ஸ்டெப்ஸ் மற்றும் எனர்ஜி தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.