நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் பிரச்சினையைத் தொடர்ந்து தற்போது டிஜிட்டல் உரிமையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் சுமார் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்தப் படம், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தள்ளிப் போனது. தற்போது அமேசான் நிறுவனமும் பின்வாங்குவதாகக் கூறப்படுவது படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.