தூத்துக்குடி அருகே +2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காலைக்கடன் கழிப்பதற்காக வீட்டின் அருகே இருந்த முட்புதர் பகுதிக்குச் சென்ற அந்த மாணவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் அந்த மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தி வெளியானதும், அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது.
View this post on Instagram
இந்த விவகாரத்தில் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகுந்த ஆவேசத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
“சட்டம் மட்டும் போதாது, இது போன்ற கொடூரம் செய்பவர்களை ஊர் மத்தியில் நிற்க வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றும், “இனிமேல் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கக்கூட மற்றவர்களுக்குப் பயம் வர வேண்டும்” என்றும் அவர் தமிழக அரசை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
