கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்துப் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளார்.