நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா பங்கேற்ற திருமண நிகழ்வு குறித்த சர்ச்சைகள் ஓய்ந்துவரும் நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் பார்த்திபன், நடிகை த்ரிஷா வெளியிட்ட பதிவால் அதிருப்தி அடைந்து தனது மன்னிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் ஒன்றாகக் கலந்துகொண்டது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கிடையே, ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், ‘குந்தவை’ கதாபாத்திரத்தில் த்ரிஷாவின் புகைப்படம் குறித்து குறிப்பிடுகையில், “குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்தவைத்தால் (உட்கார வைத்தால்) நல்லது” என கருத்து தெரிவித்திருந்தார்.
பார்த்திபனின் இந்தக் கருத்துக்கு தனது பதிலடி கொடுத்த த்ரிஷா, “அடிப்படை அறிவு இல்லாமல் பேசப்படும் இத்தகைய தரம் தாழ்ந்த சொற்கள், யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, அந்தச் சொற்களைப் பேசுபவரின் தரத்தையே பிரதிபலிக்கும்” என மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“விஜய் தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் சூழலில், அவர் திருமண நிகழ்வில் த்ரிஷாவுடன் இணைந்து கலந்துகொண்டது குறித்து த்ரிஷா யோசித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே நான் கருத்து தெரிவித்தேன். அவர் மீது எனக்குத் தனிப்பட்ட பகை இல்லை. எனது கருத்துக்காக நான் வருத்தம் தெரிவித்த பிறகு, த்ரிஷா ஒரு பதிவை வெளியிட்டார். அதில், நானே அந்தப் புகைப்படத்தைப் போடச் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பதிவு வரும் என்று தெரிந்திருந்தால், நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.”
மேலும், “இந்தப் பிரச்னையில் தொடர்புடைய விஜய், அவரது மனைவி மற்றும் த்ரிஷா ஆகிய மூவரில், அந்த மூன்றாம் தரமான ட்வீட் மூலம் நான் அடைந்த பாதிப்பிற்காகவே இந்த விளக்கத்தை அளிக்க வேண்டியுள்ளது. நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என்று என்னிடம் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனப் பார்த்திபன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகை திரிஷாவுக்கு 40 வயது ஆகிவிட்டது 40 வயது கூடவே இருக்கும் அப்படி இருக்கும் போது விஜயே கூப்பிட்டாலும் நான் வரவில்லை என்று சொல்லி அவர் வீட்டில் இருந்திருக்க வேண்டாமா. ஒரே மாதிரியான ஆடை வாங்கி கொடுத்திருந்தால் கூட அதை அணிந்து கொண்டு வீட்டில் இருக்கிறேன் நீங்கள் போயிட்டு வாருங்கள் என்றுதானே த்ரிஷா கூறி இருக்க வேண்டும். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் எத்தனையோ பேர் கொச்சையாவும் விமர்சனம் செய்யும் நிலையில் நான் பேசியதற்கு மட்டும் பதிலடி கொடுத்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேலும் இதனை என்னிடம் ஒரு பத்திரிக்கை நண்பர் கூட கூறினார் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். அதே நேரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
