சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,20,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 16,494 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
