அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியின் போது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் மனைவி நடாஷா மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு கம்பீர் மற்றும் தோனி இடையே மோதல் இருப்பதாகக் கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வீடியோ அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மைதானத்தில் தோனியும் நடாஷாவும் மிகவும் சகஜமாகவும், புன்னகையுடனும் உரையாடிக்கொண்ட காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றுள்ளன.

“>

 

குறிப்பாக, இந்தப் போட்டிக்குப்பிறகு கம்பீரின் பயிற்சியையும் அவரது புன்னகையையும் தோனி பாராட்டியதுடன், அதற்கு கம்பீரும் நெகிழ்ச்சியுடன் பதிலளித்தது “தல-கம்பீர்” இடையே எல்லாம் சுமுகமாக இருப்பதையே காட்டுகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.