2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், தற்போது தனது சம்பளம் தொடர்பாக வெளிப்படையாகப் புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேபாள பிரீமியர் லீக் (NPL) தொடரில் தான் விளையாடிய ‘போக்காரா அவெஞ்சர்ஸ்’ (Pokhara Avengers) அணி நிர்வாகம், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவரது சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. அந்தப் பதிவிற்கு அதிரடியாகப் பதிலளித்த நீஷம், “அருமை, முதலில் உங்கள் வீரர்களுக்குச் சம்பளம் கொடுங்கள்” எனப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 10, 2026
“>
லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படாததை அவர் உலகக்கோப்பை மேடையிலேயே அம்பலப்படுத்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சர்ச்சையான இந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டாலும், போக்காரா அணி நிர்வாகம் தற்போது ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
