பெங்களூருவில் நிலவி வரும் வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நகரின் பல ஹோட்டல்களில் உணவுகளின் மெனு அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி உணவகங்களில் சமையல் செய்ய எரிவாயு இல்லாததால், இன்று வெறும் காபி மற்றும் டீ மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சிலிண்டர் விநியோகம் சீராகாத பட்சத்தில், உணவகங்கள் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே உணவகங்களுக்குச் சென்ற பொதுமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உணவின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
