நாடு முழுவதும் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டுச் சூழலுக்கு மத்தியில், எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இனி வரும் நாட்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பொதுமக்களும் ஹோட்டல் உரிமையாளர்களும் தவித்து வரும் வேளையில், உயிர் காக்கும் மருத்துவமனைகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இந்த அதிரடி முடிவை பாரத் பெட்ரோலியம் எடுத்துள்ளது.