சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,418 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,31,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு பத்து ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
