ஈரானில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 சிறுமிகள் பலியான சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மை அறியும் குழுவினர் நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பள்ளியின் மீது வீசப்பட்டது அமெரிக்கா மட்டுமே பிரத்யேகமாகப் பயன்படுத்தும் ‘டொமாஹாக்’ (Tomahawk) ரக ஏவுகணை என்பது தற்போது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் எதிர்காலமான பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றது அமெரிக்காதான் எனப் பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஏவுகணை ஆதாரங்கள் டிரம்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
