அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இன்று 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் ரத்தக் களரியாக மாறியுள்ளன. இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சூழலில், ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பஹ்ரைன் நாடு உருக்குலைந்து போயுள்ளது.

பஹ்ரைனின் அரசு எண்ணெய் நிறுவனமான ‘பாப்கோ’ (Bapco), தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இனி சர்வதேச நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் செய்வதற்குத் தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறி ‘ஃபோர்ஸ் மெஜூர்’ (Force Majeure) நிலையை அறிவித்துள்ளது.

இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், போரால் துபாயில் சிக்கிக்கொண்ட இஸ்ரேலியர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நிலைமை கைமீறிச் செல்வதால், அவசர கால எண்ணெய் இருப்பை சந்தையில் வெளியிடுவது குறித்து ஜி7 (G7) நாடுகள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளன. இந்தப் போர் இந்தியாவிலும்  விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.