ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தற்போதைய பதற்றமான சூழலில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ட்ரோன் படையை ஐக்கிய அரபு அமீரகம் ஒரே தாக்குதலில் அழித்ததாகக் கூறி, 40 வினாடிகள் கொண்ட அதிரடி வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

மேலும் “வானத்தில் நெருப்பு மழை” என்ற தலைப்பில் பரவி வரும் இந்தச் செய்தி, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, இது ஒரு போலிச் செய்தி என்பது தெரியவந்துள்ளது.

“>

இந்நிலையில் உண்மையில், கணினி விளையாட்டின் ஒரு பகுதி ஆகும். தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு காட்சிகளை, நிஜமான போர் காட்சி எனத் தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எனவே, இது போன்ற உறுதிப்படுத்தப்படாத போர்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.