அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இரண்டாம் உலகப் போர் நினைவிடத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட இந்திய வம்சாவளி நபர், கடும் எதிர்ப்புகள் காரணமாகத் தனது சமூக வலைதளக் கணக்குகளை நீக்கியுள்ளார். மது ராஜு என்ற அந்த நபர், ஒரு பெண்ணுடன் சேர்ந்து போர் நினைவிடத்தின் முன் ‘டோன்ட் ரஷ் சேலஞ்ச்’ என்ற பிரபலமான பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

லட்சக்கணக்கான ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் இடத்தில், இப்படிப்பட்ட கேளிக்கையான வீடியோவை எடுத்தது அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “நினைவிடங்கள் நடனமாடுவதற்கான மேடை அல்ல, இது இந்திய சமூகத்திற்கே அவமானம்” எனப் பலரும் சமூக வலைதளங்களில் விளாசினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்டுஇன் கணக்குகளை முடக்கியுள்ளார்.

“>

 

அவர் ‘பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்’ நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருக்கு எதிராக அந்த நிறுவனத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். மேலும், அவர் நடத்தி வந்த நடனப் பள்ளியின் சமூக வலைதளப் பக்கங்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளன.