அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி கேத்தி மெக்டேனியல், தான் கோமாவில் இருந்த 18 நாட்களில் நரகம் மற்றும் சொர்க்கத்தை நேரில் கண்டதாகக் கூறி அதிர வைத்துள்ளார். 1999-ஆம் ஆண்டு நுரையீரல் பாதிப்பு காரணமாக 53 வயதில் அவர் கோமா நிலைக்குச் சென்றபோது, முதலில் இருள் சூழ்ந்த நரகத்திற்குச் சென்றதாகக் கூறுகிறார்.

அங்கு பயங்கரமான அரக்கர்கள் தன்னைத் தாக்கியதாகவும், முட்செடிகளை வெட்டும் கடினமான வேலைகளைச் செய்யச் சொல்லித் துன்புறுத்தியதாகவும் அவர் விவரித்துள்ளார். அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து தப்பிக்கத் தான் இடைவிடாது பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன உறுதியுடன் நரகத்தின் பிடியில் இருந்து தப்பிய தனக்கு, திடீரென சொர்க்கத்தின் அனுபவம் கிடைத்ததாகக் கேத்தி கூறுகிறார். அங்கு அமைதியும் அன்பும் நிறைந்திருந்ததாகவும், தான் கோமாவுக்குச் செல்வதற்கு ஒரு மாதம் முன்பு இறந்த தனது முன்னாள் காதலனை அங்கு சந்தித்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

“உனக்கு இன்னும் பூமியில் கடமைகள் பாக்கி இருக்கிறது” என்று அவர் கூறிய அடுத்த சில நாட்களில் தான் கண் விழித்ததாகக் கேத்தி கூறுகிறார். சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விசித்திரமான சம்பவத்தை, தற்போது அவர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.