அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய தேசிய கீதத்தின் போது நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அழுததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பதால், தனது தாய்நாட்டின் கீதத்தைக் கேட்டு அவர் உணர்ச்சிவசப்பட்டதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், உண்மையில் இந்தத் தகவல் தவறானது. அந்த வைரல் வீடியோ பழையது என்பதோடு, இந்தப் போட்டியின் ஆடும் பதினொருவர் பட்டியலில் இஷ் சோதி இடம்பெறவே இல்லை. தவறான புரிதலால் இந்த வீடியோ தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அதிரடி காட்டி நியூசிலாந்து பந்துவீச்சை நிலைகுலையச் செய்தனர். சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்த, இளம் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 18 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.
Born in Ludhiana, India – migrated to New Zealand when he was 4, today Ish Sodhi is playing the Final against India. He got emotional during the national anthem 🥺 #INDvsNZ pic.twitter.com/SlMRSNGm5g
— Fan Account Richard Kettlebourogh (@RichKettle07) March 8, 2026
“>
இவர்களுடன் இஷான் கிஷனும் தனது பங்கிற்கு 54 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இமாலய ரன்களைக் குவித்தது. இணையத்தில் பரவிய வதந்திகளைத் தாண்டி, மைதானத்தில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டமே ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.
