இந்திய அணி டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டிம் சீஃபர்ட் (52) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தார்; மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பந்துவீச்சில் கலக்கிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவின் மெகா வெற்றியை உறுதி செய்தனர்.
