குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகுடத்தைச் சூடப்போவது யார் என்கிற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தப் போட்டியில், இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வியூகங்களை முறியடித்து இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் மழையைப் பொழிந்து வருகின்றனர்.

​குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். வெறும் 23 பந்துகளிலேயே 50 ரன்களைக் கடந்த அவர், மின்னல் வேகத்தில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இஷான் கிஷானின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி வருவதால், இந்திய அணி வலுவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.