இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடையேயான ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் (Playing 11) வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தபோது, ரோஹித் சர்மா அவரிடம் சென்று ஆறுதலாகப் பேசி கட்டிப்பிடித்தார்.
இந்தச் செயல் குறித்து தற்போது விளக்கியுள்ள ரோஹித், “ஒரு வீரராக அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருப்பது எவ்வளவு பெரிய வலி என்பது எனக்குத் தெரியும்; 2011 உலகக்கோப்பையில் எனக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.
View this post on Instagram
அன்று நான் அனுபவித்த அதே வேதனையை சஞ்சுவும் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை. திறமை இருந்தும் வாய்ப்பு தள்ளிப்போகும்போது ஒரு வீரரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தே, அவருக்கு ஆறுதல் கூறினேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கேப்டனாக இருந்தாலும் ஒரு சக வீரரின் உணர்வுக்கு மதிப்பளித்து ரோஹித் செய்த இந்தச் செயல், சஞ்சு சாம்சன் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
