தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு, வயது வரம்புகளைக் கடந்தது என்பதற்குச் சான்றாக இணையத்தில் வெளியாகும் காணொளிகள் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்து வருகின்றன.

அண்மையில் சிறுமி ஒருவர் தனது அம்மாவிடம், “விஜய்க்குத்தான் ஓட்டு போடணும்” என்று மழலை மொழியில் பிடிவாதம் பிடித்த ‘க்யூட்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குழந்தைகளைக் கவர்ந்த தலைவராக மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரின் நம்பிக்கையாகவும் விஜய் உருவெடுத்துள்ளதை இத்தகைய காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து, தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு புகைப்படம் தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் கட்டிலில் படுத்திருந்த முதியவர் ஒருவர், தொலைக்காட்சியில் விஜய் பேசுவதைக் கேட்டவுடன், ஆர்வத்துடன் எழுந்து அமர்ந்து அதைக் கவனிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

“>

 

“தளபதி விஜய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்” என்ற பொதுவான கூற்றுக்கு, இந்த மூதாட்டியின் ஆர்வம் ஒரு வாழும் சாட்சியாக அமைந்துள்ளது. அடித்தட்டு மக்களின் இதயங்களில் விஜய் ஒரு அரசியல் தலைவராக மட்டுமன்றி, தங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் இடம்பிடித்துள்ளார் என்பதை இந்தப் புகைப்படங்கள் பறைசாற்றுகின்றன.