நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயரான ஜோரான் மம்தானியின் இல்லத்திற்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தானி பதவியேற்றது முதலே பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவரது வீட்டின் முன் வலதுசாரிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை வீசியுள்ளார், முதல் குண்டு வெடிக்காத நிலையில், இரண்டாவது குண்டைப் பற்றவைத்து வீச முயன்றபோது காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய அமீர் பாலத் மற்றும் அவருக்கு உதவிய 19 வயதுடைய இப்ராஹிம் நிக் ஆகிய இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மேயர் மீதான கொலை முயற்சி என்று சமூக வலைதளங்களில் இது விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவீச்சின் போது மேயரும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்தனரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.