திமுகவில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு திடீரென விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழரசு அவர்கள் 2006 முதல் 2011 வரை ஓமலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக (பாமக சார்பில்) பதவி வகித்தவர். கடந்த 2021-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர், தற்போது அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். சமீபகாலமாக அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் பலர் திமுகவிற்கு மாறி வரும் நிலையில், ஒரு முக்கிய நிர்வாகியான தமிழரசு திமுகவிலிருந்து வெளியேறியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்த தமிழரசு, தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
