தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் நிலமற்ற ஏழை மாணவர்களின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்திருப்பது, தமிழக இளைஞர்களிடையே ஒரு மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு, காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. “அரசியல் மாற்றம் ஏன் வேண்டும் என்பதற்கு இதுவே சான்று. இதற்கு முன் வந்த எந்த அரசாங்கமும் நிலமில்லாத மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்போம் எனச் சொன்னதில்லை. ‘ஒரே ஒரு செமஸ்டர் மட்டும் தேர்வு எழுத அனுமதி கொடுங்கள், அடுத்த தேர்வுக்கு முன் எப்படியாவது பணத்தைக் கட்டிவிடுகிறேன்’ எனப் பேராசிரியர்களிடம் மண்டியிடும் எத்தனையோ பொறியியல் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கும் அத்தகைய கசப்பான அனுபவங்கள் உண்டு” என்று அந்த இளைஞர் தனது வலியைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் மேலும் பேசிய அவர், “வசதி படைத்தவர்களுக்கோ அல்லது கல்வியின் அருமை தெரியாதவர்களுக்கோ இந்தத் திட்டத்தின் வலி புரியாது. ஆனால், வறுமையில் உழலும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எனது தம்பி, தங்கைகளுக்கு இனி அத்தகைய அவலநிலை வரக்கூடாது என்பதற்காகவே, நீங்கள் (விஜய்) இதை நிச்சயம் நடைமுறைப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஓட்டுப் போட நான் தயாராக இருக்கிறேன்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

“>

 

வறுமையால் கல்வி தடைபடும் மாணவர்களின் துயரத்தை விஜய் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார் என்பதை இந்த இளைஞரின் பதிவு ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, தவெக-வின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு இளைஞர்களிடையே பலத்த ஆதரவைத் தேடித்தந்துள்ளது.