நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், தற்போது நீலாங்கரை வீடு தொடர்பான புதிய மோதலில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் தமக்குத் தங்குவதற்குச் சொந்தமாக வேறு இடம் இல்லை என்றும், அதனால் விவாகரத்து வழக்கு முடியும் வரை தங்களை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த உரிமையைக் கோரியபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் விஜய்க்கு, அவரது சொந்தக் குடும்ப விவகாரமே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
