தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்துப் பல ரகசியங்களை உடைத்துள்ளார். குறிப்பாக, விஜய் ஏன் சமீபத்தில் கண்கலங்கினார் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். “மக்களையும் விவசாயிகளையும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் மிகப்பெரிய ஆசை. ஆனால், அவர் வெளியே வந்தால் கூடும் கூட்டத்தால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் வந்துவிடக் கூடாது என்பதால் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.

மக்களைச் சந்திக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில்தான் அவர் கண்கலங்கினார்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் திட்டமிட்டே தவெக தலைவருக்கு அனுமதி தராமல் முடக்கி வருவதாகவும், இது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியின் இந்த முட்டுக்கட்டைகளைத் தாண்டி விஜய் விரைவில் மக்களைச் சந்திப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.