டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
கடினமான இந்த இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, கடைசி வரை போராடிய போதிலும் இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதியடைந்து சாதனை படைத்துள்ளது.
