கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வெறும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த அதிரடி வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
