தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது விவசாயிகள் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். “உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரைத் தேடுவோம், கேஸ் என்றால் வக்கீலைத் தேடுவோம். ஆனால், நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளையும் நம்மை அறியாமல் நன்றி சொல்ல வேண்டிய மனிதர்கள் விவசாயிகள்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
உலகைப் படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் விவசாயிகள் என்று புகழ்ந்த அவர், இந்த பூமியைச் சாமியாக்குவதில் இயற்கைக்கு இணையாக விவசாயிகளுக்கும் பங்குண்டு என்றார். மேலும், “எனக்கு மறுபிறவி என்று ஒன்று இருந்தால், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” என்று கூறி தஞ்சை மக்களை நெகிழ வைத்தார்.
