ஒடிசா மாநிலம் பாராதீப் பகுதியில் 7 வயது சிறுமியை மூன்று நாட்களாகச் சிறை வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறித் தனது கடையின் அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துச் சிறுமி மயக்கமடைந்த நிலையில் மூன்று நாட்களாகத் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தம் போடாமல் இருப்பதற்காகத் தொடர்ந்து அவருக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து வந்த அந்த இளைஞனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
उड़ीसा के पारादीप से बड़ी भयावह खबर सामने आ रही है
मीट की दुकान चलाने वाला राजा शेख ने एक सात साल की अनाथ आदिवासी बच्ची को चॉकलेट देने के बहाने फुसला कर अपने मीट दुकान में ले गया
और वहां बंधक बनाकर तीन दिन तक उसका बलात्कार किया
बच्ची चिल्ला ना सके इसलिए वह बच्ची को नशीली… pic.twitter.com/nlf5e4cfZX
— 🇮🇳Jitendra pratap singh🇮🇳 (@jpsin1) March 3, 2026
கடந்த சனிக்கிழமை அந்தச் சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்று தனது தோழியிடம் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இந்தத் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த ஊர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அந்த இளைஞனின் கடையைச் சூழ்ந்து கொண்டனர். அவரை வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞனை மீட்டுப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சைக்காகவும் மனநல ஆலோசனைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
