வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த முக்கியமான ஆட்டத்தில் கேரளத்து சிங்கம் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார். நீண்ட நாட்களாக பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்த சாம்சன், தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தித் தனது திறமையை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

​சஞ்சு சாம்சனின் இந்த எழுச்சிக்கு பின்னால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உருக்கமான பேச்சு இருப்பதாக ஐசிசி (ICC) வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இது ஒரு நீண்ட தொடர், உனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என ரோகித் சாம்சனிடம் ஆறுதல் கூறியுள்ளார். கேப்டன் சொன்னது போலவே வாய்ப்பு கிடைத்தபோது, சாம்சன் சதத்தை நழுவவிட்டாலும் 97 ரன்கள் விளாசி இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.