திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதிலிருந்தே, அவர்கள் தங்களின் முந்தைய பிடிவாதமான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இறங்கி வந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

​இரு கட்சிகளுக்கும் இடையே சுமுகமான முறையில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் விருப்பம் என்றும், அதன் அடிப்படையிலேயே ஆலோசனைகள் நகர்வதாகவும் அவர் கூறினார். தொகுதி எண்ணிக்கை தொடர்பான இழுபறிகள் முடிவுக்கு வந்து, இன்று மாலைக்குள் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான ‘நல்ல செய்தி’ வெளியாகும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.